பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் | பிளாஷ்பேக் : முதல் படத்திலேயே நீக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் காட்சிகள் | பிக் பாஸ் தெலுங்கு : தொகுப்பாளராகத் தொடரும் நாகார்ஜுனா | 'கேம் சேஞ்ஜர்' தோல்விக்குப் பிறகான விரிசல் |
விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் மிமிக்ரி செய்து கலக்கியவர் விக்னேஷ் கார்த்திக். இயக்குனர், நடிகர் என பன்முக திறமை கொண்ட விக்னேஷ் கார்த்திக், விஜய் டிவியின் பகல் நிலவு சீரியல் மூலம் நடிகராக அறிமுகமானார். இரண்டு காதல் ஜோடிகளின் குடும்பம் மற்றும் கல்லூரி வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவான இந்த தொடர் இளைஞர்கள் மத்தியில் செம ஹிட்டானது.
2016ம் ஆண்டில் தொடங்கிய இந்த தொடர் 2019ம் ஆண்டு வரை கூட நன்றாக தான் சென்று கொண்டிருந்தது. இதற்கிடையில் இதில் நடித்த சமீரா - அன்வர் ஜோடியால் படக்குழுவில் பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து முதலில் அந்த ஜோடி வெளியேற அடுத்த சில நாட்களிலேயே விக்னேஷ் கார்த்திக் - சவுந்தர்யா ஜோடியும் வெளியேறினர். அப்போதே இது குறித்து ரசிகர்கள் கேட்டதற்கு விக்னேஷ் கார்த்திக், 'நான் வெளியேறவில்லை. அங்கு மோசமான அரசியல் நடந்து வெளியேற்றப்பட்டேன்' என கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது தனக்கு ஆதரவாக குரல் கொடுத்ததால் தான் சவுந்தர்யாவின் கேரியரில் வளர்ச்சியே இல்லை என கூறியுள்ளார். இது குறித்து சமீபத்தில் அவர் வெளியிட்ட பதிவில், 'என் வாழ்வில் நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் அது சவுந்தர்யாவிடம் தான். பகல்நிலவு தொடரில் என்னுடன் ஜோடியாக நடித்தார். அதே சேனலில் சூப்பர் சிங்கர் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானார். 2017 டெலிவிருதுகள் சம்பவத்தில் எனக்கு ஆதரவாக பொதுவெளியில் பேசியிருந்தார். அவர் அதை செய்ய வேண்டிய அவசியமில்லை. சக நடிகருக்காக அதை செய்தார். இதனாலேயே அவருக்கான சரியான இடம் தொலைக்காட்சியில் கிடைக்கவில்லை. அவருக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்க வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார்.