ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
கே.எஸ்.ரவிகுமார் நடிப்பில் உருவான கூகுள் குட்டப்பா படம் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில கே.எஸ்.ரவிகுமார் படத்தில் நடித்த தர்ஷன், லாஸ்லியா ஆகியோருடன் சென்னை, திருப்போரூரில் உள்ள தனியார் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கே.எஸ்.ரவிகுமார் பேசியதாவது:
கமல் எப்போதும் கடினமான உழைப்பை நம்பக்கூடியவர். தசாவதாரம் படத்துக்கும் அப்படித்தான் உழைத்தார். சில தினங்களுக்கு முன் தசாவாதாரம் ரிலீஸாகி 12 வருஷம் ஆச்சா? என்று ஆச்சரியத்துடன் 2 மணி நேரம் பேசினார். சில வருடங்களாகவே கமலையும் என்னையும் பார்த்து 'தசாவதாரம் 2' எப்போது என்று கேட்கிறார்கள். ஆனால் எங்கள் இருவருக்கும் எத்தனை கோடிகள் கொட்டிக்கொடுத்தாலும் தசாவதாரம் போன்ற இன்னொரு படத்தை உருவாக்கவே முடியாது. எனவே தசாவதாரம் 2'க்கு வாய்ப்பே இல்லை.
ஓ.டி.டி. தளங்களால் சினிமாவுக்குப் பாதிப்பா இல்லையா என்பது குறித்தெல்லாம் விவாதிக்க வேண்டியதில்லை. தொலைக்காட்சி வந்தபோதும் இப்படித்தான் சினிமாவே அழிந்துவிடும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். சினிமாவை திரையரங்கில் பார்க்கும் அனுபவத்துக்கு எதுவும் ஈடாகாது. அதே சமயம் ஓ.டி.டி என்பது இன்னொரு விஞ்ஞான வளர்ச்சி என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். என்று பேசினார்.