யஷ் அடுத்த படம் 'கேஜிஎப் 3'யா ?, கன்னடப் படமா? | 100 மில்லியன் சொத்துக்களின் சொந்தக்காரர் ஐஸ்வர்யா ராய் | தனுஷ் நடித்துள்ள 'த கிரே மேன்' டிரைலர் இன்று வெளியீடு | ஒரே டைப் டிசைன்: பிரசாந்த் நீல் மீது விமர்சனம் | தொடர் ஹிட்டுகள், மீள்கிறதா தமிழ் சினிமா? | குஷி முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு | நீதிமன்ற உத்தரவு ; தியேட்டர்களில் நிறுத்தப்பட்ட சேகர் | 68 வயதில் இயக்குனராக மாறிய வில்லன் நடிகர் | குட்டையான உடை அணிந்து குத்தாட்டம் போட்ட ஸ்ரீநீதி! | 'கேன்ஸ்' திரைப்பட விழாவில் அசத்திய தமிழ் திரைப்படம் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பஹத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இதுதவிர நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. வருகின்ற ஜூன் 3 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நாளை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், சூர்யா உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் அவர்கள் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.