
கன்னித்தீவை புறக்கணித்த 3 ஹீரோயின்கள்
இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய ஹீரோயின். அவருடன் ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்ஷா ஆகியார் நடித்துள்ளர். நேற்று நடந்த விழாவிற்கு சுபிக்ஷா மட்டுமே வந்திருந்தார். மற்ற 3 ஹீரோயின்களும் வரவில்லை. இத்தனைக்கும் ஆஷ்னா ஜவேரியும், ஐஸ்வர்யா தத்தாவும் பிசியான நடிகைகள் இல்லை.
இதுகுறித்து படத் தயாரிப்பு தரப்பில் விசாரித்தபோது "ஒவ்வொரு நடிகையும் வெவ்வேறு காரணங்களை சொல்லி விழாவுக்கு வரவில்லை. வரலட்சுமி சரத்குமார் தான் ஐதராபாத்தில் குடியேறி விட்டதாகவும், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பதாலும் வர இயலாது என்று தெரிவித்து விட்டதாக" கூறினார்கள்.
விழாவில் நடிகை சுபிக்ஷா பேசியதாவது: கன்னித்தீவு படத்தில் நடித்தது மட்டுமல்லாமல் ஆக்ஷன், பாடல் பாடுவது என்று ஒரு கதாநாயகன் செய்யும் அனைத்தையும் கதாநாயகிகளான நாங்கள் செய்திருக்கிறோம். திரைப்படம் சிறப்பாக உருவாகி இருக்கிறது. அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இயக்குனர் சுந்தர் பாலு இயக்கி இருக்கிறார், என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!