மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? |
நடிகர் விஜய் தற்போது முதன்முறையாக நேரடியாக தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இந்த படத்தை முன்னணி இயக்குனரான வம்சி பைடிப்பள்ளி இயக்கி வருகிறார். இந்த படம் தெலுங்கில் உருவானாலும் கூட தமிழ் ரசிகர்களுக்கும் எந்த வித்தியாசமும் தெரியாத வகையில் உருவாக்க வேண்டுமென, தமிழ் நடிகர்களான சரத்குமார், ஷாம், பிரகாஷ்ராஜ், யோகிபாபு என பார்த்து பார்த்து தேர்வு செய்து இந்த படத்தில் நடிக்க வைத்து வருகிறார் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி.
இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணைந்துள்ளார் நடிகர் பிரபு. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பட தயாரிப்பு நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. தெறி படத்தை தொடர்ந்து இந்தப்படத்தில் விஜய்யுடன் மீண்டும் இணைந்து நடிக்கிறார் பிரபு.
பிரபுவை பொருத்தவரை கடந்த 2010க்குப்பின் தெலுங்கில் ஒரு முக்கிய குணசித்திர நடிகர் ஆகவே மாறிவிட்டார். ஆனாலும் கடந்த 2013ல் வெளியான ஓங்கோல் கீதா என்கிற தெலுங்கு படத்தில் நடித்த பிரபு, அதன்பிறகு கிட்டத்தட்ட ஒன்பது வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தெலுங்கில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேப்போல் இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ் நடிப்பது பற்றிய அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளனர். மேலும் நடிகை ஜெயசுதாவும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளனர்.