'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பிரான்சில் வருடந்தோறும் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்கு பிரபலங்கள் பலரும் ஆர்வம் காட்டுவார்கள். காரணம் அங்கு திரையிடப்படும் படங்களை பார்ப்பதற்கு என ஒரு கூட்டம் வருகிறது, என்றால் அந்த நிகழ்வில் நடைபெற இருக்கும் அலங்கார அணிவகுப்பில் கலந்துகொள்ள வரும் பிரபலங்களின் ஆடை அணிகலன்களை ரசிப்பதற்கு என்று பலர் வருகை தருவார்கள்.. அப்படிப்பட்ட திரைப்பட விழாவில் நடிகை அதிதி ராவ் கலந்துகொள்ள இருக்கிறார். ஆனால் பார்வையாளராக அல்ல.. ரெட் கார்பெட்டில் நடக்கப்போகும் பங்கேற்பாளராக..
ஆம் வரும் மே 17 முதல் 26 வரை கேன்ஸ் 75வது கேன்ஸ் திரைப்பட திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் பிரபல மொபைல் நிறுவனத்தின் புதிய மாடல் மொபைல்போனை இந்தியா சார்பில் அறிமுகப்படுத்தும் மாடலிங் ஆக பங்கேற்க இருக்கிறார் அதிதி ராவ்.. இதுகுறித்த தகவலை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் அதிதி ராவ்.