''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இவருக்கு சாய்ரா பானு என்ற மனைவியும், தம்பதிக் அமீன் என்ற மகனும், கதீஜா, ரெஹிமா என்ற இருமகள்களும் உள்ளனர். தற்போது ஏஆர்.ரகுமானின் முதல் மகள் கதீஜாவுக்கும், சவுண்ட் இஞ்ஜினியர் ரியாஸ்தீனுகும் சமீபத்தில் திருமணம் நிச்சயம் நடைபெற்றது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு எளிய முறையில் இவர்களின் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் தனது குடும்பத்தினருடன் ஏ.ஆர்.ரகுமான், தமிழக முதல்வர் ஸ்டாலினை இன்று சந்தித்துள்ளார். அப்போது கதீஜா மற்றும் ரியாஸ்தீன், முதல்வரிடம் வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பின்போது முதல்வரிடன் மனைவி துர்கா ஸ்டாலின், நடிகர் உதயநிதி ஆகியோர் உடனிருந்தனர்.
பிரம்மாண்டமாய் நடந்த வரவேற்பில் பி.சுசீலா மட்டும் பங்கேற்பு
ரஹ்மானின் மகள் திருமணம் எளிய முறையில் நடத்தப்பட்டது என்றாலும், அன்று மாலை திருமண வரவேற்பை பிரம்மாண்டமாய் நடத்தி உள்ளார் ரஹ்மான். சென்னையை தாண்டி நெல்லூர் போகும் வழியில் ரஹ்மானுக்கு சொந்தமாக பல ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு பிரம்மாண்டமாய் திருமண வரவேற்பை நடத்தி உள்ளனர். இதில் திரையுலகினருக்கோ, பத்திரிக்கையாளர்களுக்கோ யாருக்கும் அழைப்பு இல்லை. ரஹ்மானிடம் இசை பயிற்சி பெறும் மாணவர்கள் மற்றும் அவருடைய இசை கலைஞர்களே மட்டுமே பங்கேற்றனர். மேலும் திரையுலகில் இருந்து பின்னணி பாடகி பி.சுசீலா மட்டுமே இந்த திருமண வரவேற்பில் பங்கேற்றுள்ளார். வேறு யாரையும் ரஹ்மான் அழைக்கவில்லை.