காந்தாரா சாப்டர் 1 படத்தின் தமிழக தியேட்டர் உரிமம் இத்தனை கோடியா? | தனுஷ் முதுகில் குத்த விரும்பாத ஜி.வி.பிரகாஷ் | 24 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ்! | கடவுள் எனக்கு கொடுத்த பரிசு என் ரசிகர்கள்: தேஜூ அஸ்வினி | 'குட் பேட் அக்லி - ஓடிடி தளத்தில் இன்னும் நீக்கப்படாத இளையராஜா பாடல்கள் | 200 கோடியை நெருங்கும் 'லோகா' | தனுசின் அடுத்த பட இயக்குனர்: தெலுங்கில் கவனம் செலுத்தும் ரகசியம் | இன்று விஜய் மகளுக்கு பிறந்தநாள்: எங்கே படிக்கிறார் தெரியுமா? | ரஜினி, கமல் இணையும் கதை இதுதானா? | நானி படத்துக்காக பிரமாண்ட குடிசை செட் |
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‛நானே வருவேன்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. தாணு தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நடிகை இந்துஜா, செல்வராகவன் , யோகிபாபு, எல்லி அவ்ராம் , பிரபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள செல்வராகவன் "நானே வருவேன் படத்தின் கதை தனுஷ் உடையது. நான் அந்த கதையை இயக்கி மட்டும் உள்ளேன்''என தெரிவித்துள்ளார். செல்வராகவன் முதன்முதலில் மற்றவரின் கதையை இயக்கும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.