'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷாபி.என் இயக்கியிருக்கும் திரைப்படம் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்'. இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா, மேகா ஆகாஷ் ,அஞ்சு குரியன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். முக்கிய வேடங்களில் பாடகர் மனோ, மா கா பா ஆனந்த், பக்ஸ், ஷாரா, மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா , கே பி ஒய் பாலா, 'மைக்செட்' அபினாஷ், நடிகை திவ்யா கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பேண்டஸி கலந்த ரொமாண்டிக் காமெடி ஜானரில் தயாராகியிருக்கும் இந்தப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் ஒரு பக்கம் மார்வெல் ஸ்டுடியோஸின் கதாபாத்திரங்களான ஹல்க் மற்றும் அயர்ன் மேன் இருவரும் சிவாவை பிடித்திருப்பது போன்று பன்னான போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.