இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
இந்தியத் திரையுலகத்தில் ரூ.1000 கோடி வசூலித்த நான்காவது படமாக 'கேஜிஎப் 2' படம் புதிய சாதனையை படைத்தது. கன்னடத் திரைப்படம் ஒன்று இந்த அளவிற்கு மாபெரும் வசூலைக் குவித்திருப்பது இதுவே முதல் முறை.
அப்படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் தற்போது இந்திய அளவில் கவனம் பெறும் இயக்குனர்களில் ஒருவராக மாறிவிட்டார். அவர் தற்போது பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தை இயக்கி வருகிறார். அப்படத்திற்குப் பிறகு ஜுனியர் என்டிஆர் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் என்று ஒரு தகவல்.
இதனிடையே, பிரசாந்த் நீலை தங்களது படங்களில் ஒப்பந்தம் செய்ய சில முன்னணி தெலுங்கு தயாரிப்பு நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றனவாம். இதனால், தன்னுடைய சம்பளத்தை 50 கோடியாக உயர்த்திவிட்டாராம் பிரசாந்த் நீல். இருந்தாலும் பரவாயில்லை எங்களுக்கு படம் செய்து தாருங்கள் என அதையும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்களாம்.
தென்னிந்தியத் திரையுலகத்தில் ராஜமவுலிக்குப் பிறகு அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் பிரசாந்த் நீல் தான் இருக்கிறாராம். 'சலார்' படமும் வெற்றி பெற்றுவிட்டால் 100 கோடி ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.