ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி | ‛காந்தாரா' கண்டெடுத்த அய்ரா |

தமிழ்த் திரையுலகத்தில் குழு நடனத்தில் நடனமாடும் ஒரு நடிகராக அறிமுகமாகி பின்னர் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என தனது தனிப்பட்ட திறமையால் உயர்ந்தவர் பிரபுதேவா. ஹிந்திக்கும் சென்று அங்கு முன்னணி நடிகரான சல்மான் கானை வைத்தும் படங்களை இயக்கியவர்.
தற்போது தமிழில் ஐந்தாறு படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் மீண்டும் சில முக்கிய நடிகர்களுக்காக நடன இயக்குனர் பணியையும் செய்ய ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் வடிவேலுவுடன் மீண்டும் இணைந்தார். 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்திற்காக வடிவேலுவுக்கு நடனம் அமைத்துக் கொடுத்தார்.
அடுத்து தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்காக நடனம் அமைக்கிறார். மலையாள 'லூசிபர்' தெலுங்கு ரீமேக்கிற்காக சிரஞ்சீவி நடனம் ஆட, அந்த நடனத்தை இயக்குகிறார் பிரபுதேவா. தற்போது தமிழில் பிரபுதேவா பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால் இன்னும் சில வருடங்களுக்கு இயக்கம் பக்கம் போக மாட்டார் என்கிறார்கள்.