பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

தெலுங்கில் 2020ம் ஆண்டு வெளிவந்து சிறப்பான வரவேற்பைப் பெற்ற ஒரு படம் 'ஹிட்'. அந்தப் படத்தில் நாயகனாக நடித்த விஷ்வக் சென் நடித்து அடுத்து 'அசோகவனம்லோ அர்ஜுன கல்யாணம்' என்ற படம் வெளிவர உள்ளது. அப்படத்திற்காக ஒரு யு டியூபரை வரவழைத்து ஐதராபாத் வீதிகளில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு அந்த யு டியூபர் தற்கோலை செய்து கொள்வது போல 'பிரான்க்' நிகழ்ச்சியை நடத்தினர். அதற்கு சமூக ஆர்வலர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. விஷ்வக் சென் மீதும் வழக்குகள் போடப்பட்டது.
அது குறித்து விவாதிக்க விஷ்வக் சென்னை தெலுங்கு செய்தி சேனலான டிவி 9 விவாதம் ஒன்றிற்கு அழைத்தது. அப்போது விஷ்வக் மீது சில குற்றச்சாட்டுக்களை வைத்தார் செய்தி வாசிப்பாளர் தேவி நாகவள்ளி. அதனால் கோமடைந்த விஷ்வக் சென் பேசும் போது ஒரு பெரிய கெட்ட வார்த்தையை நேரலையின் பயன்படுத்தினார். அதைக் கேட்டு கோபமடைந்த செய்தி வாசிப்பாளர் தேவி நாகவள்ளி, விஷ்வக் சென்னை ஸ்டுடியோவை விட்டு வெளியேறும்படி 'கெட் அவுட்' சொன்னார். தேவி அவரது செயலில் பிடிவாதமாக இருந்ததால் வேறு வழியில்லாமல் மைக்கை கழட்டி வைத்து விஷ்வக் சென் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இந்த விவகாரம் தெலுங்குத் திரையுலகத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.




