ராம் சரண் படத்தில் ஷோபனா? | சிரஞ்சீவி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் தமன்னா | ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி |

ஐதராபாத் : ''ஹிந்தி சினிமாக்கள் மட்டுமே இந்திய சினிமா என்பதை போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றனர். தெலுங்கு திரைப்பட நடிகர் என்ற முறையில் இது என்னை அவமானப்படுத்துவதை போல உணர்கிறேன்'' என, நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிரஞ்சீவி பேசினார்.
சமீப நாட்களாக ஹிந்தி திணிப்பு தொடர்பாக விவாதங்கள் நடந்து வருகின்றன. கன்னட நடிகர் சுதீப் கடந்த வாரம் வெளியிட்ட சமூகவலைதள பதிவில் 'ஹிந்தி தேசிய மொழி அல்ல' என, குறிப்பிட்டார். இதற்கு பதில் அளித்த, 'பாலிவுட்' நடிகர் அஜய் தேவ்கன், 'அப்படியானால், நீங்கள் நடித்த படங்களை ஏன் ஹிந்தியில் 'டப்' செய்து வெளியிடுகிறீர்கள்' என, கேள்வி எழுப்பினார். சுதீப்புக்கு ஆதரவாக தென் மாநில திரைத்துறையினர் பலர் குரல் எழுப்பினர். இந்த விவாதத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும் பங்கேற்றதை அடுத்து, இது அரசியல் விவாதமானது.
இந்த சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில், தெலுங்கு திரைப்பட நடிகர் சிரஞ்சீவி பேசிஉள்ள கருத்து, அடுத்த சர்ச்சையை ஆரம்பித்து வைத்துள்ளது. ஆச்சார்யா படத்தின் வெளியீடு தொடர்பான நிகழ்ச்சி ஐதராபாதில் நடந்தது.
அதில் சிரஞ்சீவி பேசியதாவது: கடந்த 1988ல் ருத்ரவீணா என்ற படத்தை தயாரித்து நடித்தேன். இந்தப் படத்துக்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்தன. இதை பெற்றுக்கொள்ள டில்லி சென்றோம். விருது வழங்கும் விழாவுக்கு முன்னதாக, தேனீர் விருந்து நடந்தது. அந்த விருந்து நடந்த கூடத்தின் சுவர்கள், பிரிதிவிராஜ் கபூர், ராஜ் கபூர், திலீப் குமார், தேவ் ஆனந்த், அமிதாப் பச்சன், தர்மேந்திரா உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களின் புகைப்படங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. அவர்களை குறித்து புகழ்ந்து எழுதப்பட்டு இருந்தன.
தென்மாநிலம் சார்பாக, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பிரேம் நசீர் புகைப்படங்கள் மட்டுமே இடம் பெற்று இருந்தன. நடிகர்கள் சிவாஜி கணேசன், ராஜ்குமார், என்.டி.ராமாராவ், விஷ்ணுவர்தன் புகைப்படங்கள் அங்கு இடம்பெறவில்லை. இது மனதை மிகவும் பாதித்தது. ஹிந்தி சினிமா மட்டுமே இந்திய சினிமா என்பதை போன்ற தோற்றத்தை அவர்கள் உருவாக்குகின்றனர். இதனால், தென்மாநில சினிமாவை அவமானப்படுத்துவதாக உணர்ந்தேன். இப்போது, பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற படங்கள் தென்மாநில திரையுலகை பெருமைபட வைத்துள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.