'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
திருவனந்தபுரம் : பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக பிரபல இயக்குனர் சணல் குமார் சசிதரன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில், பிரபல நடிகர் திலீப், பாலியல் புகாரில் சிக்கியுள்ளார். அவருடைய முன்னாள் மனைவியான பிரபல நடிகை மஞ்சு வாரியரிடமும் இது தொடர்பாக விசாரணை நடந்துள்ளது.
இந்நிலையில் பிரபல இயக்குனர் சணல் குமார் சசிதரன் கூறியுள்ளதாவது: நடிகை மஞ்சு வாரியரை கடந்த சில நாட்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை. அவருடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஏற்கனவே பதிவிட்டிருந்தேன். மஞ்சு வாரியரின் மேலாளர்கள் சிலரின் பெயரையும் நான் குறிப்பிட்டிருந்தேன். என்னுடைய பதிவுகளுக்கு மஞ்சு வாரியர் பதில் அளிக்கவில்லை. அதனால், என்னுடைய சந்தேகம் அதிகரித்துள்ளது. யாரோ சிலரின் கட்டுப்பாட்டில் மஞ்சு வாரியர் இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன். மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.