சிவராஜ் குமாரின் ‛பைரதி ரணங்கள்' நவ. 29ல் தமிழில் ரிலீஸ் | ‛குட் பேட் அக்லி' படத்தை விட்டு வெளியேறிய தேவி ஸ்ரீ பிரசாத்! | தனுஷ் படத்தில் இணைந்த பவி டீச்சர்! | நான் உயிரோடு உள்ளவரை புதுப்பேட்டை 2 முயற்சி தொடரும் - செல்வராகவன்! | பிள்ளையார்சுழி போட்ட பிரேமி: மனம் திறந்த பிரியதர்ஷினி | நயன்தாராவிற்கு ஆதரவு அளித்தது ஏன்? - நடிகை பார்வதி விளக்கம்! | பிளாஷ்பேக் : ஓவிய நாயகன் ஒளியின் நாயகனான பின்னணி | திரிசூலம், சூர்யவம்சம், விக்ரம் - ஞாயிறு திரைப்படங்கள் | ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை |
அதிக படங்களில் நடித்த தென்னிந்திய நடிகைகளில் ஒருவர் லட்சுமி. 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நாடக நடிகையாக இருந்த அம்மாவின் வழியில் 1961ம் ஆண்டு ஸ்ரீவள்ளி படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கினார். பின்னர் எம்ஜிஆர், சிவாஜி, சிவகுமார், ஜெமினி கணேசன் என அப்போது முன்னணியில் இருந்த அத்தனை ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்தார்.
'சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது பெற்றார். இதுதவிர தமிழகம், கேரளா, கர்நாடக மாநில அரசுகளின் விருதுகளையும் பெற்றுள்ளார். இந்த நிலையில் கர்நாடக மாநில அரசு அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்துள்ளது. மறைந்த பழம்பெரும் நடிகர் ராஜ்குமார் பெயரில் வழங்கப்படும் இந்த விருதை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வழங்கினார். பெங்களூருவில் நடந்த 2017ம் ஆண்டுக்கான மாநில திரைப்பட விருது வழங்கும் விழாவில் லட்சுமிக்கு இந்த விருது வழங்கப்பட்டது.