''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
தமிழ் சினிமாவில் சின்னக்கலைவாணர் என ரசிகர்களால் அழைக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த வருடம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சினிமாவில் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக நகைச்சுவை கலந்து கருத்துக்களை கூறிவந்த விவேக், இன்னொரு பக்கம் மரம் நடுவதன் அவசியம் குறித்து வலியுறுத்தி பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு இளைய தலைமுறையிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வந்தார்.
அந்த வகையில் இந்த சமுதாயத்திற்கு தன்னாலான சிறப்பான பங்களிப்பை தந்துள்ள, தனது கணவர் விவேக்கின் பெயரை அவர் இதுநாள் வரை வசித்துவந்த தெருவுக்கு சூட்ட வேண்டுமென அவரது மனைவி அருள்செல்வி தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.
அவரது இந்த கோரிக்கை குறித்து நடிகை கஸ்தூரி கூறும்போது, “உண்மையிலேயே இப்படி அவரது தெருவுக்கு விவேக்கின் பெயரை சூட்டுவது அந்த மக்கள் கலைஞனுக்கு செய்யும் மிகப்பெரிய கவுரவமாக இருக்கும்” என்றும் வரவேற்றுள்ளார்.