ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் | பிரித்விராஜ் செய்யலாம்.. நான் செய்யக்கூடாதா? : மலையாள குணச்சித்திர நடிகர் கேள்வி | தேசிய விருது பெற்றதற்காக கொடுத்த பார்ட்டியில் பணம் இல்லாமல் பாத்திரம் கழுவ தயாரான ஆசிஷ் வித்யார்த்தி | இனி முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் : நிச்சயதார்த்தம் முடிந்தபின் விஷால் முதல் பேட்டி | புதிய காதலி உடன் முன்னாள் காதலர் : தமன்னா கொடுத்த பதில் |
சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள ஆச்சாரியா திரைப்படம் வரும் ஏப்ரல் 29ம் தேதி வெளியாக இருக்கிறது இந்தப் படத்தில் ராம்சரண் முக்கிய வேடத்திலும் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும் நடித்துள்ளனர். அதேசமயம் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் நடித்துள்ளாரா இல்லையா என்கிற சந்தேகமும் ரசிகர்களுக்கு இருந்து வந்தது. காரணம் இந்த படத்தில் நடித்துவந்த சமயத்தில் தான் காஜல் அகர்வால் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். ஒருவேளை காஜல் சம்பந்தப்பட்ட காட்சிகளை முன்கூட்டியே படமாக்கி விட்டார்களா என்ற கேள்வியும் எழுந்தது.
ஆனால் சமீபத்தில் வெளியான ஆச்சார்யா படத்தின் டிரெய்லரில் காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம் பெறவில்லை. மேலும் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் காஜல் அகர்வாலின் பெயரை சிரஞ்சீவி, ராம்சரண் உள்ளிட்ட படக்குழுவினர் யாரும் குறிப்பிட்டு பேசவில்லை. இந்த நிலையில் படத்தின் இயக்குனர் கொரட்டாலா சிவா, சோசியல் மீடியாவில் இப்படி காஜல் அகர்வால் குறித்து எழுந்துள்ள சந்தேகம் பற்றி விளக்கம் அளித்துள்ளார்.
“காஜல் அகர்வால் இந்த படத்தில் ஒரு பாடலில் நடித்து முடித்து விட்டார் அதன் பிறகு சில காட்சிகளை படமாக்கியபோது தான் அவர் கர்ப்பம் என்கிற தகவலை கூறினார். அதேசமயம் கதைப்படி இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு அவர் ஜோடியாக நடிக்கவில்லை ஜாலியான ஒரு கதாபாத்திரத்தில் தான் நடிப்பதாக அவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருந்தது. அதனால் நிலைமையை புரிந்து கொண்டு அவராகவே தான் இந்த படத்தில் இருந்து வெளியேறினார்” என்று கூறியுள்ளார் கொரட்டாலா சிவா.