இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் 'பீஸ்ட்'. இப்படத்திற்காக படக்குழுவினருக்கு விஜய் விருந்து வைத்து சிறப்பித்துள்ளார். அது குறித்து படத்தின் இயக்குனர் நெல்சன் பகிர்ந்துள்ளதாவது, “விஜய் சார் எங்களுக்கு விருந்து வைத்தற்கு நன்றி. மொத்த குழுவுடன் ஒரு மகிழ்ச்சியான நினைவில் வைக்க வேண்டிய மாலையாக அது இருந்தது.
இந்த சந்தர்ப்பத்தில் எங்களுக்கு ஆதரவையும், அன்பையும் அளித்த விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடன் பணியாற்றுவது வசீகரமானது. எனது வாழ்நாள் முழுவதும் அந்த அனுபவத்தை நான் மதிக்கிறேன், பெருமைப்படுவேன். உங்களது நட்சத்திர அந்தஸ்தும், வசீகரிப்பும் இந்தப் படத்தை முழுவதுமாக எடுத்துச் சென்றது.
எங்களது அற்புதமான குழு இல்லாமல் இது நடந்திருக்காது. உங்களுடன் வேலை செய்வது இனிமையான அனுபவம். பல தடைகளைத் தகர்த்தெறிந்து எங்கள் மீது அன்பையும், ஆதரவையும் கொட்டிய ரசிகர்களுக்கும் நன்றி. விஜய் சாருடனும், மொத்த குழுவுடனும் இருந்து, எப்போதும் போல் படத்தை மாபெரும் வெற்றியடைய வைத்திருக்கிறீர்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.