நாக சைதன்யாவின் புதிய பட டைட்டிலை அறிவித்த மகேஷ்பாபு | இ.வி.கணேஷ்பாபுவின் 'ஆநிரை' குறும்படத்திற்கு கோவா திரைப்பட விழாவில் பாராட்டு | பிரித்விராஜ் படத்தை ஓவர்டேக் செய்யும் சிறிய நடிகரின் படம் | சிறையில் இருக்கும் நிலையில் நடிகர் தர்ஷினின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கில்லி பாணியில் அடுத்த படத்தை இயக்கும் கீர்த்தீஸ்வரன் | 'திரெளபதி 2' படத்தில் ரக்ஷனாவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு | ஜிம்மில் பீஸ்ட் மோடில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா | நடிகர் அஜித்துக்கு 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது | பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் |

திரிஷா நடிப்பில் பொன்னியின் செல்வன் படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் ஒரு படத்தில் திரிஷா நடிக்கிறார். பல குறும்படங்கள், விளம்பர படங்கள் மற்றும் வெப்தொடர் எடுத்த அருண் வசீகரன் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். இழப்பதற்கு எதுவுமில்லாத ஒரு பெண் இரத்த பூமியில் மேற்கொள்ளும் ஆக்ரோஷமான பயணமே கதையின் கரு. 2000களில் மதுரையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்த படம் உருவாகிறது.
திரிஷா முதன்மை நாயகியாக நடிக்க, அவருடன் மியார் ஜார்ஜ், சந்தோஷ் பிரதாப், எம்.எஸ்.பாஸ்கர், வேலராமமூர்த்தி, விவேக் பிரசன்னா மற்றும் டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் நடிக்கிறார்கள். உண்மை சம்பவம் நிகழ்ந்த மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று(ஏப்., 25) முதல் படப்பிடிப்பை துவக்கி உள்ளனர். தொடர்ச்சியாக 50 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.