2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

சக்திவேல் இயக்கத்தில் விதார்த், லட்சுமி ப்ரியா சந்திரமவுலி, கருணாகரன், மசூம் சங்கர் மற்றும் பலர் நடிக்கும் படம் 'பயணிகள் கவனிக்கவும்'. இப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் அடுத்த வாரம் ஏப்ரல் 29ம் தேதி வெளியாக உள்ளது. இதனிடையே, 'பயணிகள் கவனிக்கவும்' என்ற தலைப்பு தன்னுடைய அப்பாவின் புகழ் பெற்ற நாவலின் தலைப்பு. அதை படத்திற்காக வைக்க தங்களிடம் எந்தவித அனுமதியையும் பெறவில்லை என மறைந்த எழுத்தாளர் பாலகுமாரனின் மகன் சூர்யா பாலகுமாரன் குற்றம் சாட்டியிருந்தார்.
இதைத் தொடர்ந்து ஆஹா ஓ.டி.டி க்கும், ஆல் இன் பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்திற்கும் விளக்கம் கேட்டு பாலகுமாரன் குடும்பத்தின் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதையடுத்து இன்று(ஏப்., 25) காலை இயக்குனர் எஸ்பி சக்திவேல் மற்றும் தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா இருவரும் பாலகுமாரனின் வீடு தேடி சென்று அவர்களது விளக்கத்தை கொடுத்து, மன்னிப்பும் கேட்டுள்ளனர். இதையடுத்து இந்த பிரச்னையை சுமூகமாக பேசி முடித்துக் கொண்டதாக பாலகுமாரனின் மகன் சூர்யா பாலகுமாரன் தெரிவித்துள்ளனர்.