'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
ஒரு பெரிய நடிகரின் படம் வந்தால் அதே சமயத்தில் வேறு படங்கள் வருவதை பெரிய நடிகரின் ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்த வாரத்தைப் பொறுத்தவரையில் இன்று 'பீஸ்ட்' படம் வெளியானது, நாளை 'கேஜிஎப் 2' படம் வெளியாக உள்ளது.
விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்துடன் 'கேஜிஎப் 2' படம், அதுவும் ஒரு கன்னட டப்பிங் படம் போட்டி போடுவதா என விஜய் ரசிகர்கள் பலரும் 'கேஜிஎப் 2' பற்றி சமூக வலைத்தளங்களில் அதிகமாகக் கமெண்ட் செய்தார்கள். ஆனால், 'கேஜிஎப் 2' நாயகன் யஷ், இது போட்டியல்ல, இரண்டு படங்களையும் கொண்டாடுங்கள் என்று கூறினார்.
இன்று 'பீஸ்ட்' படம் வெளிவந்துவிட்டது. படத்திற்கு அதிகமான நெகட்டிவ் விமர்சனங்கள்தான் வந்து கொண்டிருக்கிறது. எனவே, நாளை முதல் 'கேஜிஎப் 2' படம் 'பீஸ்ட்' போட்டியை எளிதில் சமாளித்துவிடும் என்கிறார்கள். குறிப்பாக தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் 'கேஜிஎப் 2' படத்திற்கு தானாகவே வரவேற்பு கிடைத்துவிடக் கூடிய வாய்ப்பு உள்ளது.
'பீஸ்ட்' கதாநாயகன் 'ரா' அதிகாரியான வீரராகவன், 'கேஜிஎப் 2' ரவுடி ராக்கிக்கு எளிதில் வழியை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டார் என்பதுதான் திரையுலகில் பேச்சாக உள்ளது.