ஆகஸ்ட் மாதமே திரைக்கு வரும் ரஜினியின் ஜெயிலர் | கண்ணீர் அஞ்சலி பேனர் உடன் நடிகர் ஜி.எம்.குமார் | காஷ்மீரில் நில அதிர்வு : சென்னை திரும்பிய விஜய் | மகனை தொடர்ந்து அப்பாவை இயக்கும் மாரி செல்வராஜ் | கிரிக்கெட் பயிற்சியில் ‛அட்டகத்தி' தினேஷ் | ஜீவா - அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் | லியோ படத்தில் நடிக்கிறாரா யு-டியூப்பர் இர்பான்? | ஜெயம் ரவி - ஏஆர் ரஹ்மான் இணையும் பான் இந்திய படம் | மீண்டும் கதை நாயகியான அபிராமி | டி.வி.யில் நேரடியாக வெளியாகும் ஆரி படம் |
ஐஸ்வர்யா தனது கணவர் தனுஷை பிரிவதாக அறிவித்த பிறகு சினிமாவில் பிசியாகி விட்டார். சமீபத்தில் முசாபிர் என்ற இசை ஆல்பத்தை இயக்கி வெளியிட்டார். இந்த ஆல்பம், தமிழில் 'பயணி' என்று பெயரில் வெளியானது. தற்போது ஓ சாதிசால் என்ற ஹிந்தி படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்க இளையராஜா இசை அமைக்கிறார். இது தொடர்பாக இளையராஜாவை அவர் சந்தித்தார்.
இந்த சந்திப்பு குறித்து இளையராஜா கூறியிருப்பதாவது: உங்களை (ஐஸ்வர்யா) சந்தித்து நேரத்தை செலவிட்டதில் மகிழ்ச்சி. ஒருவர் வாழ்க்கையில் பல விஷயங்கள் நடக்கலாம். ஆனால், ஒரு விஷயம் மட்டும் என்றும் மாறாமல் அப்படியே இருக்கும். அது அன்பு மட்டுமே. கடவுள் ஆசிர்வதிக்கட்டும். எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள் .என்று கூறியுள்ளார்.