அடுத்தடுத்து மேனேஜர்களை நீக்கிய விஷால், ரவிமோகன் | 100 மில்லியன் கடந்த சிரஞ்சீவி, நயன்தாரா பாடல் | போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் |

ஒரு மாநில மொழித் திரைப்படத்தைப் பார்த்து ஒரு ஹிந்தித் திரைப்படம் பின் வாங்கியிப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் தான். யஷ் நடித்த 'கேஜிஎப் 2' கன்னடப் படம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் ஆகி இந்த வாரம் ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
அதே தினத்தில் ஷாகித் கபூர் நடித்த 'ஜெர்ஸி' ஹிந்திப் படத்தையும் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், 'கேஜிஎப் 2' படத்திற்கு வட இந்தியாவில் கிடைக்கும் வரவேற்பு மிகவும் அதிகமாக உள்ளது. அதைக் கருத்தில் கொண்டு அந்தப் படத்துடன் ஏன் போட்டி போட வேண்டும் என தங்கள் படத்தை ஒரு வாரம் தள்ளி வைத்துள்ளது 'ஜெர்ஸி' குழு.
நேற்று இரவு இது பற்றிய திடீர் முடிவை தயாரிப்புக் குழுவினர் எடுத்துள்ளனர். இரண்டு படங்களின் டிரைலர்களை வைத்தே எந்தப் படத்திற்கு அமோக ஆதரவு என்பதைத் தெரிந்து கொள்ளலாம். 'ஜெர்ஸி' பட டிரைலர் 65 மில்லியன் பார்வைகளையும், 'கேஜிஎப் 2' டிரைலர் 85 மில்லியன் பார்வைகளையும் யு டியூபில் இதுவரை கடந்துள்ளது.
'கேஜிஎப் 2' படத்திற்கான முன்பதிவு உலகம் முழுவதும் சிறப்பாக இருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.