மீண்டும் கைகோர்க்கும் 'பேட்ட' கூட்டணி | ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படப்பிடிப்பு நிறைவடைந்தது | ஓடிடி-யில் கலக்கும் ஜி.வி பிரகாஷ் குமாரின் 'கிங்ஸ்டன்' | பூரி ஜெகன்நாத் உடன் இணைவது குறித்து விஜய் சேதுபதி | கிரிக்கெட் வீரராக களமிறங்கும் ஆதி | 'ஆர்ஆர்ஆர்' டிரைலரை முந்திய 'ஹிட் 3' | பிளாஷ்பேக்: காட்சியை தத்ரூபமாக்க, கழுதைகளை கொண்டுவரச் செய்து, படப்பிடிப்பு நடத்திய 'மாடர்ன் தியேட்டர்ஸ்' அதிபர் டி ஆர் சுந்தரம் | இளையராஜா நோட்டீஸ்: இன்று பதில் கிடைக்குமா ? | அஜித்தின் அடுத்த படமும் தெலுங்கு நிறுவனத்திற்கே..?? | அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில் மூன்று ஹீரோயின்கள்? |
தெலுங்கு திரையுலகை தனது பிரமாண்டமான படங்கள் மூலம் அடுத்தடுத்த உயரங்களுக்கு எடுத்து செல்பவர் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி. இவரது இயக்கத்தில் ஜூனியர் என்.டிஆர், பிரபாஸ், ராம்சரண் என மூவருமே தலா இரண்டு படங்களில் நடித்துவிட்ட நிலையில் மகேஷ்பாபு மட்டும் இதுவரை ராஜமவுலியின் இயக்கத்தில் நடிக்கவில்லை. ரசிகர்களின் இந்த மனக்குறை தீரும் விதமாக அடுத்து மகேஷ்பாபு நடிக்கும் படத்தை தான் இயக்க போகிறேன் என சில மாதங்களுக்கு முன் அறிவித்தும் விட்டார். இந்நிலையில் மகேஷ்பாபுவுக்காக இரண்டு கதைகள் தயார்செய்து வைத்துள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் ராஜமவுலி.
இதுபற்றி அவர் கூறும்போது, “கொரோனா தாக்கம் துவங்கிய பின்னர் வெளியில் எங்கேயும் செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்த சமயத்தில் என் தந்தை விஜயேந்திர பிரசாத், வீட்டில் பொழுதை வசதியாக கழித்து விட கூடாது என கூறினார். அந்த சமயத்தில் பலவிதமான ஐடியாக்களை பேசிப்பேசி மகேஷ்பாபு படத்திற்காக இரண்டு விதமான கதைகளை பிடித்தோம்.. இரண்டுமே மிக பிரமாண்டமான பட்ஜெட்டை கேட்கும் கதைகள் தான். அதேசமயம் மகேஷ்பாபு ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் கதைகள்” என்று கூறியுள்ளார்.