விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' |
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக டான் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தநிலையில் தற்போது முதன்முதலாக தெலுங்கு திரையுலகிலும் நுழைந்துள்ள சிவகார்த்திகேயன் ஜதிரத்னாலு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் இருபதாவது படமாக உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ரியபோஷப்கா என்பவர் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருவது குறித்து தனது சந்தோசத்தையும் அதே சமயம் தனது மன வருத்தத்தையும் ஒருசேர வெளிப்படுத்தியுள்ளார் மரியா ரியபோஷப்கா.
வருத்தத்திற்கு காரணம் தற்போது அவரது சொந்த நாடான உக்ரைனில் நிலவும் சூழல் தான். சொந்த ஊரை பிரிந்து வந்து பல நாட்கள் ஆகிறது என்றும் அதே சமயம் தற்போது நிலவும் போர்ச்சூழலும், மக்கள் படும் கஷ்டமும் தன்னை வருத்தத்திற்கு உள்ளாக்கி இருப்பதாகவும் கூறியுள்ளார் மரியா. அதேசமயம் சிவகார்த்திகேயன் படத்தில் நடிப்பதன் மூலம் இயக்குனர் அனுதீப், சிவகார்த்திகேயன் போன்ற சுவாரசியமான மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.