சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

கடந்த 2014ல் தெலுங்கில் இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் நானி, சமந்தா நடிப்பில் ஈகா (தமிழில் நான் ஈ) திரைப்படம் வெளியானது. இறந்து போன கதாநாயகன் ஈ வடிவத்தில் வந்து தன்னைக் கொன்ற வில்லனை பழிவாங்குவது போல வித்தியாசமான கோணத்தில் உருவாக்கப்பட்ட இந்த கதை மிக பிரம்மாண்டமான விஎப்எக்ஸ் காட்சிகளுடன் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
சமீபத்தில் ஜெனிலியா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ஜூனியர் என்கிற படத்தில் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜமவுலி பேசும்போது, ஈகா திரைப்படம் எனது சிறந்த படம் என்று கூறியுள்ளார்.
இது பற்றி அந்த விழாவில் ராஜமவுலி கூறும்போது, “ஜூனியர் என்டிஆர் நடிப்பில் என்னுடைய சிம்மாதிரி படம் வெளியான பிறகு அதுபோன்ற கமர்சியல் படங்களை இயக்குவதற்கு தான் நான் லாயக்கு என்பது போல ஒரு பேச்சு எழுந்தது. அதனை மாற்றும் விதமாகத்தான் ஈகா படத்தை உருவாக்கினேன்” என்று கூறியுள்ளார்.




