'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது! | ''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் | காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே! | 175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா! | சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' |
சின்னத்திரை இயக்குநர் திருமுருகன், பல ஹிட் தொடர்களை கொடுத்துள்ளார். அவர் நடித்து, இயக்கிய நாதஸ்வரம், கல்யாண வீடு ஆகிய சீரியல்களில் சகோதிரி கேரக்டரில் நடித்து அசத்தியவர் தான் பென்சி ப்ரிங்கிளின். திறமையான நடிகை என்பது ஒருபுறமிருக்க பரதநாட்டியம், குச்சுப்புடி போன்ற சாஸ்திர நடனக்கலைகளையும் முறையாக கற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இவ்வளவு திறமை இருந்தும், சற்று குண்டான உடலமைப்பு கொண்ட பென்சி பாடிஷேமிங் காரணமாக முன்னணி டான்ஸ் நிகழ்ச்சியிலிருந்து பயந்து வெளியேறியதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ள பென்சி ப்ரிங்கிளின், 'உங்களில் யார் அடுத்த பிரபுதேவா போட்டிக்கான ஆடிஷனில் நானும் கலந்து கொண்டேன். எனக்கு கிளாசிக்கல் நடனம் மட்டும் தான் தெரியும். வெஸ்டர்ன் கத்துக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. என்னை பார்த்துவிட்டு ஒரு கோரியோகிராபர் நீ ரொம்ப குண்டா இருக்கேம்மா; நீ ஏன் போட்டியில கலந்துக்கனும் நினைக்கிறன்னு கேட்டார். அப்பவே பாடிஷேமிங் எதிர்கொள்ள ஆரம்பிச்சேன். அந்த போட்டியில் தேர்வாகியும், என்னால முடியாதுங்கிற பயத்தால நான் கலந்துக்கல. அந்த வாய்ப்பை மிஸ் பண்ணிட்டு பல நாட்கள் அதை முயற்சி செய்து பாத்திருக்கலாம்னு அழுதிருக்கேன்' என்று கூறியுள்ளார்.
கடந்த 12 வருடங்களில் பென்சி ப்ரிங்கிளின் நடித்த சீரியல் இரண்டு மட்டும் தான் என்றாலும், அவர் தேர்ந்தெடுத்திருந்த கதாபாத்திரம் மற்றும் அவரது எதார்த்தமான நடிப்பால் நல்லதொரு அங்கீகாரத்தை பெற்றுள்ளார். இப்போது திருமுருகன் டீமில் பயணித்துக் கொண்டிருக்கும் பென்சி மிக விரைவில் புதிய ப்ராஜெக்டில் சந்திப்பேன் என நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.