96 பட இயக்குனரிடம் கதை கேட்ட நானி | லிங்குசாமி, சரண் புதிய படத்திற்காக கூட்டணி | இதெல்லாம் டிசம்பர் மாதம் ரிலீஸ் : ரிசல்ட் எப்படி இருக்குமோ? | சின்மயி மன்னிப்பு : இயக்குனர் பேரரசு பதிலடி | கைவசம் 3 படங்கள் : தமிழில் கால் பதிக்க நினைக்கிறார் கிர்த்தி ஷெட்டி | கிண்டல், கேலி, நெகட்டிவ் எண்ணம் : சமூக வலைதளங்களை தவிர்க்கும் திரைபிரபலங்கள் | நல்ல படம் பண்ணிட்டு ரிட்டையர்டு : கமல்ஹாசன் | விஜய் பட இயக்குனர் உடன் இணையும் சல்மான் | பாண்டிராஜ் படத்தில் ஜெயராம், ஊர்வசி | உறவு பிரியாமல் இருக்க 'பூதசுத்தி விவாஹம்' செய்த சமந்தா |

நடிகை நிலா ஞாபகமிருக்கிறதா ?. எஸ்ஜே சூர்யா இயக்கி, நடித்த 'அன்பே ஆருயிரே' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அந்த படத்திற்குப் பிறகு சில தமிழ்ப் படங்களில் நடித்தார். தெலுங்கு, ஹிந்தி, கன்னடப் படங்களிலும் நடித்தார். கடைசியாக தமிழில் 2011ல் வெளிவந்த 'கில்லாடி' படத்தில் நடித்திருந்தார்.
தற்போது தனது பெற்றோர் வைத்த பெயரான மீரா சோப்ரா என்ற பெயரையே சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தி வருகிறார். அடிக்கடி பதிவுகளையும் பதிவிடுவார். இன்றைய பதிவில் பான்--இந்திய ஹீரோக்களாக வெற்றி பெற்றுள்ள தென்னிந்திய ஹீரோக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“தென்னிந்திய நடிகர்கள் பான்-இந்தியா அங்கீகராம் பெறுவதில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களது திறமை, பணிவு, வேட்கை ஆகியவற்றிலிருந்து ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டும். பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராம் சரண், யஷ் ஆகியோரை பார்க்கும்போது மிகவும் பெருமையாக உள்ளது” என அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால், அவரது லிஸ்ட்டில் ஜுனியர் என்டிஆரைக் குறிப்பிட மறந்துவிட்டார்.




