‛பொன்னியின் செல்வன்' பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினி, கமல் | தீவிர உடற்பயிற்சியில் ஐஸ்வர்யா ரஜினி | ரஜினியின் ‛ஜெயிலர்' படப்பிடிப்பு துவங்கியதாக தகவல் | செப்டம்பர் 9ல் வெளியாகும் அமலாவின் கணம் | நான் பாடிய பாடலை அதிதி ஷங்கர் பாடியதால் எந்த வருத்தமும் இல்லை : பாடகி ராஜலட்சுமி | ஜின்னா - தெலுங்கு படத்தில் சன்னி லியோன் : போஸ்டர் வெளியானது | மும்பையில் ஜோதிகா, சூர்யா : வைரலாகும் புகைப்படங்கள் | செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா : தமிழ்தாய் வாழ்த்துப் பாடி அசத்திய சிவகார்த்திகேயன் மகள் | சென்னைக்கு வரும் 'லைகர்' படக்குழு | ராஷ்மிகாவின் மூன்று முக்கிய ஆசைகள் |
திருமண முறிவுக்கு முன், திருமண முறிவுக்கு பின் என்று பிரித்து பார்க்கும் அளவுக்கு தனது கணவர் நாக சைதன்யாவுடனான விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட பிறகு தற்போது சமந்தா தனது படங்கள் குறித்து வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஹீரோக்களுடன் டூயட் பாடுவதை குறைத்துக் கொண்டு கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும் படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடித்து வருகிறார் சமந்தா. அந்தவகையில் தெலுங்கில் சாகுந்தலம், யசோதா ஆகிய படங்களில் கதையின் நாயகியாக நடித்துள்ளார்.
இதில் இரட்டை இயக்குனர்களான ஹரி மற்றும் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள யசோதா திரைப்படம் வரும் ஆகஸ்ட்-12ஆம் தேதி வெளியாக இருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக மலையாள நடிகரான உன்னி முகுந்தன் நடித்துள்ளார். அதுமட்டுமல்ல நடிகை வரலட்சுமி சரத்குமாரும் இன்னொரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்