சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி நடிகையாக வளர்ச்சியடைந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தற்போது தெலுங்கு, தமிழ் மட்டுமல்லாது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். நேற்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் முதன்முறையாக தெலுங்கில் நடித்து வரும் படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார் என்கிற அறிவிப்பு வெளியானது.
அதேபோல இன்னொரு சஸ்பென்ஸும் கூட நேற்று அவரது பிறந்தநாளில் உடைந்து வெளிச்சத்திற்கு வந்தது. ஆம். தற்போது தெலுங்கில் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து வரும் லெப்டினன்ட் ராம் என்கிற படத்தில் ஆப்ரீன் என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் ராஷ்மிகா நடிக்கிறார் என்கிற அறிவிப்பை அவரது கேரக்டர் லுக் மோஷன் போஸ்டருடன் வெளியிட்டுள்ளனர். இதில் பற்றி எரியும் ஒரு காரின் முன்னே சிவப்பு நிற ஹிஜாப் அணிந்து ரொம்பவே வித்தியாசமாக காட்சி தருகிறார் ராஷ்மிகா.
இந்த படத்தில் ஏற்கனவே மிருனாள் தாக்கூர் என்பவர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இன்னொரு முக்கியமான, அதே சமயம் கொஞ்ச நேரமே வந்து போகின்ற இன்னொரு நாயகி கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக கடந்த செப்டம்பர் மாதமே ராஷ்மிகாவை அணுகி பேச்சு வார்த்தை நடத்தி வந்தார்கள். முக்கியத்துவம் உள்ள கேரக்டர் தான் என்றாலும், இப்போது முன்னணி நடிகையாக மாறி இருக்கும் நிலையில், அதில் நடிக்கத்தான் வேண்டுமா என்று ராஷ்மிகா தயக்கம் காட்டுவதாகவும் அதனால் அவர் இந்தப்படத்தில் நடிக்க வாய்ப்பில்லை என்றும் சொல்லப்பட்ட நிலையில் தான், அவரது பிறந்தநாளில் இப்படி ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பு வெளியாகியுள்ளது.