அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் | நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா | பேனர் வைக்க விடாமல் தடுத்தது யார்? மனம் திறப்பாரா கேபிஒய் பாலா | புகழ் நடிக்கும் '4 இடியட்ஸ்' | பூ வச்சது குத்தமாய்யா : நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் |
இயக்குனர் ராஜமவுலியின் டைரக்ஷனில் ராம்சரண் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் இருவருக்குமே சம முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருந்ததால் இரண்டு ஹீரோக்களுமே மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இருவரும் தற்போது மாறி மாறி இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் உற்சாகமாக கலந்து வருகின்றனர்.
அப்படி சமீபத்தில் மும்பைக்கு வந்த ராம்சரண், கருப்பு நிற குர்தாவில் கையில் காவித்துண்டுடன் வெறுங்காலுடன் வருகை தந்திருந்தார். இது அங்கிருந்த பலரையும் ஆச்சரியப்படுத்தியது ஆனால் அவர் விரைவில் ஐயப்பனை தரிசிப்பதற்காக சபரிமலை செல்ல இருப்பதால் 41 நாட்கள் விரதத்தில் இருக்கிறார் என்கிற தகவல் தெரியவந்துள்ளது. மேலும் வருடந்தோறும் சபரிமலைக்கு செல்வதையும் ராம்சரண் வழக்கமாக வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.