கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? |
தெலுங்கில் பிரபாஸ் உடன் சலார் மற்றும் பாலகிருஷ்ணாவின் 107ஆவது படத்தில் நடிக்கிறார் ஸ்ருதி ஹாசன். தனது காதலருடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை அப்போது சோசியல் மீடியாவில் வெளியிட்டு வரும் ஸ்ருதிஹாசன், இன்றைய தினம் தனது காதலர் சாந்தனுவுக்கு பிறந்தநாள் என்பதால் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எனது காதலே, இவ்வுலகம் உனது அற்புதமான ஆற்றலை சந்திக்க பாக்கியம் பெற்றுள்ளது. உன்னை அறிந்து கொள்வதற்கு நான் தினமும் நன்றி உள்ளவனாக இருக்கிறேன். ஏனெனில் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார் ஸ்ருதி. அதோடு காதலருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கிறார்.
மேலும் காதலர் உடன் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ ஒன்றும் வைரலாகி உள்ளது. அதில் காதலருக்கு பிறந்தநாள் நாள் கேக் ஊட்டுகிறார் ஸ்ருதி. பதிலுக்கு சாந்தனு, ஸ்ருதிக்கு லிப் கிஸ் கொடுத்துள்ளார்.