பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் |
ஒரே தலைப்பில் வெவ்வேறு மொழிகளில் படங்கள் வருவது எப்போதோ ஒரு முறைதான் நடக்கும். ஆனால், ஒரே தலைப்பில் தற்போது மூன்று மொழிகளில் வெவ்வேறு படங்கள் தயாராகி வருகிறது. தமிழில் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி, டாப்ஸீ மற்றும் பலர் நடிக்கும் படத்தின் பெயர் 'ஜன கன மன'. மலையாளத்தில் டிஜோ ஜோஸ் ஆன்டனி இயக்கத்தில் பிருத்விராஜ், மம்தா மோகன்தாஸ், ஸ்ரீதிவ்யா மற்றும் பலர் நடிக்கும் படத்தின் பெயர் 'ஜன கன மன'. இப்படம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக உள்ளது. அதனால், இப் பெயரில் வெளியாகும் முதல் படம் இது என்று முந்திக் கொள்ளும்.
அடுத்து ஹிந்தியில் பூரி ஜகன்னாத் இயக்கத்தில் விஜய் தேவரகொன்டா நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட படம் 'ஜேஜிஎம்'. ஜன கன மன என்பதன் சுருக்கம்தான் இப்படம். இதில் முதலில் மகேஷ்பாபு நடிப்பதாக இருந்தது. ஆனால், அவருக்குப் பதிலாக விஜய் தேவரகொன்டா நடிக்கிறார்.
நல்ல வேளையாக ஒவ்வொரு படமும் பெரிய இடைவெளியில்தான் வெளியாக உள்ளது. அதனால், ரசிகர்களுக்குக் குழப்பம் வர வாய்ப்பில்லை. இருந்தாலும் எதிர்காலத்தில் 'ஜன கன மன' என கூகுள் செய்தால் மூன்று படங்களின் தகவல்களும் வரலாம். அதில் எப்படம் முந்திக் கொண்டு முதலில் வரும் என்பது அது பெறப் போகும் வெற்றியைப் பொறுத்தது.