அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்து முடிந்துள்ளது. இந்த விழாவில் வில் ஸ்மித்தின் மனைவி மொட்டை தலையுடன் வந்ததை பார்த்த தொகுப்பாளர் கிரிஸ் ராக் என்பவர் கிண்டல் செய்து பேசி இருக்கிறார். இதனால் கடும் கோபத்திற்கு ஆளான வில் ஸ்மித் வேகமாக சென்று அந்த தொகுப்பாளரின் கன்னத்தில் பளார் என்று அறைந்துள்ளார். இந்த விருது விழா நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வந்ததால் இது மிகப்பெரிய பரபரப்பை உருவாக்கியுள்ளது .
இந்நிலையில், இயக்குனர் வெங்கட்பிரபு அதுகுறித்து ஒரு பதிவு போட்டு உள்ளார். அந்த பதிவில், வில்ஸ்மித்தின் மனைவி தொற்று நோயினால் தனது தலையில் உள்ள முடியை இழந்திருக்கிறார். இது உங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியான விஷயமா? இதுகுறித்து கிண்டல் செய்ய வேண்டுமா? ஆஸ்கர் விருது வழங்கும்போது ஒருவரின் தலையில் முடி இல்லாததை அனைவர் முன்னிலையிலும் இப்படி பேசுவது நன்றாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? என கேள்வி எழுப்பி இருக்கிறார் வெங்கட்பிரபு. அவரது இந்த பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.