Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'வலிமை' ரூ.200 கோடி வசூல் : போனிகபூர் அறிவிப்பு

24 மார், 2022 - 10:53 IST
எழுத்தின் அளவு:
Valimai-collection-crossed-Rs.200-crore-says-Producer

வினோத் இயக்கத்தில், அஜித், கார்த்திகேயா, ஹுமா குரேஷி மற்றும் பலர் நடித்த 'வலிமை' படம் கடந்த மாதம் 24ம் தேதி வெளிவந்தது. இன்றுடன் படம் வந்து ஒரு மாதமாகிவிட்டது. நாளை இப்படத்தை ஓடிடி தளத்தில் நான்கு மொழிகளில் வெளியிடுகிறார்கள்.

அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பாளரான போனி கபூரும் வெளியிட்டிருந்தார். அதில், “200 பிளஸ் கோடி பாக்ஸ் ஆபீஸ் சாதனை புரிந்த தென்னிந்திய ஆக்ஷன் அனுபவமான 'வலிமை' படத்தை ஹிந்தியிலும் கொண்டு வருகிறது ஜீ 5. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் மார்ச் 25ம் தேதி இப்படத்தின் பிரிமீயர், 2022ம் ஆண்டின் மிகப் பெரிய பிளாக் பஸ்டர் ஆக்ஷன் படம்” என அவர் பதிவிட்டுள்ளார்.

'வலிமை' படத்தின் வசூல் பற்றி படம் வெளிவந்ததிலிருந்தே பல்வேறு விதமான தகவல்கள் வெளிவந்தன. சமூகவலைதளங்களில் தங்களை பாக்ஸ் ஆபீஸ் டிராக்கர்கள் என அழைத்துக் கொள்ளும் பலர் இவ்வளவு வசூல், அவ்வளவு வசூல் என அள்ளிவிட்டார்கள். சிலரோ படம் நஷ்டம் தரும் என்றெல்லாம் சொன்னார்கள். அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் போனி கபூர் 200 கோடி பிளஸ் வசூல் என குறிப்பிட்டுள்ளதாக அஜித் ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.

இனி, வலிமை வசூல் பற்றி யாரும் வாயைத் திறக்க மாட்டார்கள் என்று நம்புவோமாக.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
வாரணாசியில் ஆர்ஆர்ஆர் குழு வழிபாடுவாரணாசியில் ஆர்ஆர்ஆர் குழு வழிபாடு பாட்டு வரும் ‛டிஎம்எஸ்' என்றாலே பாட்டு வரும் : நூற்றாண்டில் இசையரசர் பாட்டு வரும் ‛டிஎம்எஸ்' என்றாலே ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Bye Pass - Redmond,யூ.எஸ்.ஏ
25 மார், 2022 - 07:10 Report Abuse
Bye Pass வருமானவரி துறை அதிகாரிகளும் படித்திருப்பாங்க ..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in