மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

தெலுங்கு, தமிழ் இரண்டிலும் கதாநாயகியாக நடித்து வரும் ரெஜினா விரைவில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியாக உள்ள ஆச்சார்யா திரைப்படத்தில் சானா கஸ்டம் என்ற ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருக்கிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால் என இரண்டு கதாநாயகிகள் இருந்தாலும், அவர்களுக்கு என இதுபோன்று குத்து பாடல்கள் இல்லாமல் ரெஜினாவுக்கு மட்டுமே அது ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த படத்தில் தான் ஒரு பாட்டுக்கு ஆடியது இதுதான் முதலும் கடைசியும் என ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ரெஜினா.
இதுபற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறும்போது, ஒரு பாட்டுக்கு ஆடுவதில் எனக்கு எப்பவும் விருப்பம் இருந்ததில்லை. ஆனால் ஒரே ஒருவரை தவிர, நான் சில வருடங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் கூறும்போது கூட, சிரஞ்சீவியுடன் மட்டும் வாய்ப்பு கிடைத்தால் ஒரு பாட்டுக்காவது ஆடி விட வேண்டும் என்ற எனது ஆசையை தெரிவித்து இருந்தேன். காரணம் அது என் பாக்கெட் லிஸ்ட்டில் இடம்பிடித்த ஆசைகளில் ஒன்று. அதற்கேற்றார் போல் ஆச்சார்யா படத்தில் வாய்ப்பு வந்ததும் எந்த மறுபேச்சும் பேசாமல் ஒப்புக்கொண்டேன். சிரஞ்சீவியுடன் இணைந்து நடனம் ஆடுவது போன்ற வேறு இனிய அனுபவம் ஏதாவது இருக்கிறதா என்ன ? ஆனால் அவருடன் சேர்ந்து ஆடிய பின் இதுவே ஒரு பாடலுக்கு ஆடுவது முதலும் கடைசியுமாக இருக்கும் என்று கூறியுள்ளார் ரெஜினா.