'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் நடந்தது. பல்வேறு நீதிமன்ற பிரச்சினைகளுக்கு பிறகு நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் விஷால் தலைமையிலான அணியினர் பெரும் வெற்றி பெற்றனர். தலைவராக நாசர், செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணை தலைவர்களாக கருணாஸ், பூச்சி முருகன் தேர்வானார்கள்.
இவர்கள் தவிர்த்து 21 பேர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வானார்கள். இவர்கள் அனைவரும் விஷால் அணியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் நடிகை குஷ்பு 1407 வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தார். கோவை சரளா 2வது இடத்தையும், ராஜேஷ் 3வது இடத்தையும் பெற்றார்.
செயற்குழு உறுப்பினர்களாக தேர்வான மற்றவர்கள் வருமாறு: மனோபாலா, அஜய்ரத்னம், பசுபதி, ஜூனியர் பாலையா, சிபிராஜ், லதா, விக்னேஷ், சோனியா, பிரசன்னா, நந்தா, ரமணா, தளபதி தினேஷ், சரவணன், பிரேம்குமார், ஸ்ரீமன், ஜெரால்டு, ரத்தன்பா, மா.பிரகாஷ், வாசுதேவன், ஹேமச்சந்திரன், காளிமுத்து.