சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் |

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தினம் தினம் டாஸ்க் நடக்கிறதோ இல்லையோ ஏதாவது பிரச்னை மட்டும் தொடர்ந்து நடக்கிறது. பள்ளியில் சிறுவர்கள் 'மிஸ் இவன் என்ன அடிச்சிட்டான், கடிச்சிட்டான்னு' சொல்வது போல் ஹவுஸ்மேட்டுகளும் மாறி மாறி புகார் கூறி வருகின்றனர். இந்த வாரம் ஹவுஸ்மேட்டுகள் சேவல், கோழி வேஷம் போட்டு முட்டையை தேடும் டாஸ்க் நடந்து கொண்டிருக்கிறது. இதில், முட்டைய தேடிக் கண்டுபிடிப்பதோடு, அதை திருடு போகாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். முதலில் நிரூப் டாஸ்க்கின் போது பாலாஜி தன்னை அடித்துவிட்டதாக கூறி சண்டை போட்டார். அதன்பின் நிரூப், ஜூலியை தகாத வார்த்தையில் திட்டினார். இவ்வாறு சென்று கொண்டிருக்கையில் அடுத்த பிரச்னையாக பாலாஜிக்கும், ரம்யாவிற்கும் தற்போது சண்டை எழுந்துள்ளது.
பாலாஜி டீமுக்கு சொந்தமான முட்டையை ரம்யா பாண்டியன் திருடிக் கொண்டு ஓடுகிறார். இதை பார்த்துவிட்டு ரம்யாவை தடுப்பதற்காக முயற்சிக்கும் பாலாஜி ரம்யாவை பின்னாடி இருந்து கட்டிப்பிடிக்கிறார். அப்போது ரம்யா பாலாஜியின் கையை கடித்துவிட்டு அவர் பிடியில் இருந்து விடுபடுகிறார். இதனால் இருவருக்குமிடையே சண்டை வருகிறது. எப்படி கடிக்கலாம் என பாலாஜியும், என்னை எப்படி தொடலாம் என ரம்யா பாண்டியனும் மாறி மாறி சண்டை போடுகின்றனர்.
இதனால் கடுப்பான ரசிகர்கள் 'இது பிக்பாஸ் வீடா? இல்ல பால்வாடி ஸ்கூலா?' என கலாய்த்து வருகின்றனர். இந்த இருவரில் யார் மீது தவறு அவருக்கு என்ன தண்டனை என்பது இந்த வாரம் குறும்பட நேரத்தின் போது தெரிய வரும் என்பதால் ரசிகர்கள் அனைவரும் சனி, ஞாயிறு கிழமைகளுக்கான எபிசோடுகளுக்காக ஆவலோடு காத்திருக்கின்றனர்.