உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' | பிரபாஸ் ஜோடியாகும் அனிமல் பட நடிகை! சீன, கொரியன், ஜப்பானிஸ் மொழிகளிலும் ரிலீசாகும் ‛ஸ்பிரிட்' | மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு? | பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம்? | ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம் | தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் |
தனுஷ், ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்த 3 என்ற படத்தை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினி, அதன் பிறகு கவுதம் கார்த்திக் நாயகனாக நடித்த வை ராஜா வை படத்தையும் இயக்கினார். இந்த நிலையில் தனுஷை பிரிவதாக அறிவித்த பிறகு முசாபிர் என்ற மியூசிக் வீடியோவை இயக்க உள்ள ஐஸ்வர்யா, அடுத்தபடியாக படங்கள் இயக்குவதற்காக தயாராகி வருகிறார். அந்த வகையில், அவர் இயக்கும் புதிய படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கப் போவதாக கோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. சிம்புவும், தனுஷும் போட்டி நடிகர்களாக கருதப்பட்டவர்கள். இப்படியான நிலையில் தனுஷை பிரிவதாக அறிவித்த பிறகு சிம்புவை வைத்து தனது முதல் படத்தை ஐஸ்வர்யா இயக்கப்போவதாக வெளியாகியுள்ள செய்தி கோலிவுட்டில் பரபரப்பை உருவாக்கி இருக்கிறது.