விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! |

மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகை அபர்ணா தாஸ். மனோகரம் என்ற படத்தில் அறிமுகமாகி நடித்து வருகிறார். விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இந்த நிலையில் புதிய தமிழ் படம் ஒன்றில் ஹீரோயின் ஆனார்.
ஒலிம்பிக்ஸ் மூவீஸ் சார்பில் எஸ்.அம்பேத் குமார் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் கவின் ஜோடியாக நடிக்கிறார். ராஜேஷ். எம் உதவியாளர் கணேஷ் பாபு இயக்குகிறார். கவின் மற்றும் அபர்ணா தாசுடன், 'முதல் நீ முடிவும் நீ' புகழ் ஹரிஷ், 'வாழ்' புகழ் பிரதீப் ஆண்டனி மற்றும் பலர் நடிக்கிறார்கள். எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார். ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் கணேஷ் பாபு கூறியதாவது: 2கே கிட்ஸின் ரசனைக்கு ஏற்ற காதல் கதையாக உருவாகிறது. இந்த படம் இளைஞர்களை மட்டுமல்ல, உலகளாவிய ரசிகர்களை கவரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. முழுத்திரைப்படமும் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது.படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தலைப்பு குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.என்றார்.