பாலிவுட்டில் அறிமுகமாகும் மீனாட்சி சவுத்ரி | லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி | குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் | துபாயில் சொகுசு கப்பலா... : மாதவன் கொடுத்த விளக்கம் | அருண் விஜய் படத்திற்கு முதல் விமர்சனம் தந்த தனுஷ் | சரஸ்வதி படத்தின் மூலம் இயக்குனர் ஆகும் நடிகை வரலட்சுமி | சாந்தனுவின் ஏக்கம் தீருமா | 'கந்தாரா சாப்டர் 1' போட்டியை சமாளிக்குமா 'இட்லி கடை' | ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியின் மீது 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு |
நடிகர் கார்த்தியின் உழவர் பவுண்டேஷன் சார்பில் ‛உழவர் விருதுகள் 2022' என்ற தலைப்பில் விருது வழங்கும் விழா நேற்று சென்னையில் உள்ள தி.நகர் சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, இயக்குனர் வெற்றிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். இயற்கை விவசாயம் நீர்நிலை, பாரம்பரிய விதை மீட்பு, சந்தைப்படுத்துவது. விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த குழுக்களுக்கு இந்த விழாவில் விருதுகள் வழங்கப்பட்டது. இதில் தனிநபர் மற்றும் குழுக்கள் என மொத்தம் 6 விருதுகள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு விருது பெற்றவருக்கும் ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையும் வழங்கபட்டது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் பேசும்போது, உழவன் பவுண்டேஷன் தொடங்கியுள்ள கார்த்தி ஒரு ஏழைப் பெண் விவசாயின் பேரன். இளைய தலைமுறையினர் விவசாயத்தில் ஈடுபட வேண்டும். நான் பிறந்த போது பத்து மாதத்தில் அப்பா இறந்து விட்டார். என் அம்மாதான் என்னை வளர்த்தார். அரளி செடியும் எருக்கம் செடியும் உள்ள ஊரில் என்னை வளர்த்தார் என் அம்மா. எனக்கு தலை வாரி விட்டதில்லை. உணவு ஊட்டி விட்டதில்லை. தனியாளாக விவசாயம் செய்து என்னை காப்பாற்றினார் என்று சொல்லி தேம்பி தேம்பி அழுதார். மேலும், பெண்கள்தான் விவசாயத்தில் அதிகமான வேலைகளை செய்கிறார்கள். சிலையை தான் நாம் கும்பிடுகிறோம். கடவுளை யாரும் பார்த்ததில்லை. பெண்கள்தான் கடவுள் என்று நெகிழ்ச்சியுடன் பேசினார் நடிகர் சிவகுமார்.