வெல்லும் வரை காத்திரு: நடிகை குயின்சி ஸ்டான்லி | சிவராஜ் குமாரின் ‛பைரதி ரணங்கள்' நவ. 29ல் தமிழில் ரிலீஸ் | ‛குட் பேட் அக்லி' படத்தை விட்டு வெளியேறிய தேவி ஸ்ரீ பிரசாத்! | தனுஷ் படத்தில் இணைந்த பவி டீச்சர்! | நான் உயிரோடு உள்ளவரை புதுப்பேட்டை 2 முயற்சி தொடரும் - செல்வராகவன்! | பிள்ளையார்சுழி போட்ட பிரேமி: மனம் திறந்த பிரியதர்ஷினி | நயன்தாராவிற்கு ஆதரவு அளித்தது ஏன்? - நடிகை பார்வதி விளக்கம்! | பிளாஷ்பேக் : ஓவிய நாயகன் ஒளியின் நாயகனான பின்னணி | திரிசூலம், சூர்யவம்சம், விக்ரம் - ஞாயிறு திரைப்படங்கள் | ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை |
அஜித் நடிப்பில், வினோத் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் 'வலிமை'. இப்படத்திற்கு இசை யுவன்ஷங்கர் ராஜா என்றுதான் படத்தின் டைட்டில் கார்டில் போடுகிறார்கள். ஆனால், நன்றி ஜிப்ரான் என்று மற்றொரு கார்டும் வருகிறது.
படத்திற்கு பின்னணி இசையை ஜிப்ரான் தான் அமைத்துள்ளார் என்று படம் வெளியாவதற்கு முன்பிருந்தே சமூக வலைத்தளங்களில் சர்ச்சை எழுந்து வந்தது. ஆனால், படம் வெளியான பின்னும் படத்தின் பின்னணி இசையமைப்பாளர் யார் என்பது பற்றி சம்பந்தப்பட்டவர்களே அறிவிக்கவில்லை.
படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் சமீபத்தில் வீடியோ பேட்டி ஒன்றில் வினோத், யுவன் மோதல் பற்றிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிப்பதை லாவகமாகத் தவிர்த்துள்ளார். “அவர்கள் இருவருக்கும் என்ன பிரச்சினை என்று தெரியாது. படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் தான். வினோத்தும், ஜிப்ரானும் நண்பர்கள். படத்திற்காக அங்கங்கே சில 'டிப்ஸ்'களை அவர் கொடுத்திருக்கலாம். வினோத் இயக்கத்தில் அஜித் அடுத்து நடிக்க உள்ள படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கலாம் அல்லது வேறு யாராவது இருக்கலாம். எனக்கு யுவனை மிகவும் பிடிக்கும். யுவன் மிகச் சிறந்த இசையமைப்பாளர். யுவன் ஒரு படத்துக்கு இசையமைத்தால் அவருடைய இசையை சரியாகச் செய்வார். விரைவில் அவர் என்னுடைய தயாரிப்பில் உருவாக உள்ள ஒரு ஹிந்திப் படத்திற்கு அவர் இசையமைக்க உள்ளார்,” என்று பதிலளித்துள்ளார்.
ஆனால், படத்திற்கு யுவன் பின்னணி இசையமைக்கவில்லை என்றோ, ஜிப்ரான்தான் அதைச் செய்தார் என்றோ சொல்லவில்லை. அஜித் - யுவன் கூட்டணியில் வந்த 'தீனா, பில்லா, மங்காத்தா, ஆரம்பம், நேர்கொண்ட பார்வை' ஆகிய படங்களில் இசையாலும், தீம் மியுசிக்காலும் அதிகம் பேசப்பட்டது. இந்த 'வலிமை' படத்திலும் வெளியீட்டிற்கு முன்பாக 'விசில் தீம் மியூசிக்' ஒன்று வெளியானது. இருப்பினும் அது படத்தில் இடம் பெறவில்லை.
யுவனின் எந்த ஒரு தீம் மியூசிக்கும் 'வலிமை' படத்தில் இல்லாதது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும், யுவன் இசையமைத்த இரண்டு பாடல்களையும் படத்தில் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை இயக்குனர் வினோத். இருவருக்கும் இடையில் என்ன பிரச்னை, எதனால் இந்தப் படத்தின் பின்னணி இசை பற்றிய உண்மை எதுவும் வெளியிடவில்லை என்பதை வினோத்தும், யுவனும் தான் சொல்ல வேண்டும்.