ஹாலிவுட் நடிகை புற்றுநோய்க்கு பலி | தமிழுக்கு ஹீரோவாக வரும் தெலுங்கு காமெடி நடிகர் | விமரிசையாக நடந்த பூர்ணாவின் வளைகாப்பு | படித்த கல்லூரிக்கு விசிட் அடித்த மம்முட்டி | சாஹோ டைரக்டருடன் கைகோர்த்த பவன் கல்யாண் | மோகன்லால் பட வாய்ப்பை ஒதுக்கிய ரிஷப் ஷெட்டி | விருது வழங்கும் விழாவில் மீண்டும் சந்தித்துக்கொண்ட சூபியும் சுஜாதையும் | சத்தம் இல்லாமல் பாலிவுட் படத்தில் நடித்து முடித்த ஜோதிகா | அசீமிற்கு விருந்து கொடுத்த வனிதா | என் மீது பொய்வழக்கு : நித்யா பேட்டி |
பாலிவுட் நடிகையான ஹூமா குரேஷி, அங்கு இரண்டாவது வரிசை நடிகைதான். ரஜினி நடித்த காலா படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். தற்போது வலிமை படத்தில் நடித்துள்ளார். இரண்டு படத்திலுமே அவர் ஹீரோயின் என்று சொல்லிக் கொள்ள முடியாத கேரக்டர். காலாவின் ரஜினியின் முன்னாள் காதலியாக வந்து செல்வார். வலிமையில் அஜீத்தின் சக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இரண்டிலுமே அவருக்கு விரல் விட்டு எண்ணக்கூடிய காட்சிகள் தான். என்றாலும் ஹீமா தமிழ்சினிமாவில் வலிமையாக காலூன்ற முயற்சிக்கிறார். தமிழ் சினிமாவுக்கென்று கால்ஷீட் மானேஜர் மற்றும் மக்கள் தொடர்பாளரை நியமித்திருக்கிறார்.