பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து யாரும் எதிர்பாராத வகையில் வனிதா விஜயகுமார் வெளியேறினார். இதற்கு காரணமாக, கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிவிட்டதால், ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவார். ஏற்கனவே வனிதாவுக்கும் ரம்யாவுக்கு ஆகாது என்பதால் தான் வனிதா வெளியேறிவிட்டார் என செய்திகள் உலா வந்தது. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த வனிதா முதல் வேலையாக இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
வனிதா கூறுகையில், 'நான் பிக்பாஸ் அல்டிமேட்டை விட்டு வெளியேறியதை ரம்யா கிருஷ்ணனுடன் இணைக்கும் முட்டாள்களுக்கு' என்று சிரிப்பு ஸ்மைலியை போட்டுள்ளார். அதன் பின், 'நான் சுயமரியாதையை தேர்ந்தெடுத்து இருக்கிறேன். நான் மன உளைச்சலுக்கு ஆளானதால் என்னால் குழப்பத்தை தாங்க முடியவில்லை. எனவே, துணிச்சலாக முடிவெடுத்து வெளியேறிவிட்டேன். என் சூழ்நிலையை புரிந்து கொண்டு என்னுடன் ஒத்துழைப்பு கொடுத்த எண்டெமால் மற்றும் டிஸ்னிக்கு என் மனப்பூர்வ நன்றி. வாழ்க்கை உங்களுக்கு வாய்ப்புகளை தருகிறது. உங்களுக்கு எது செட் ஆகுமோ அதை தேர்ந்தெடுங்கள். நான் எப்போதும் உறுதியான முடிவுகளை எடுப்பேன். அதை நினைத்து வருந்த மாட்டேன். ஏனெனில் எனக்கு என்ன வேண்டும், என் மதிப்பு என்ன என்பது எனக்கு தெரியும். எனவே, சில்லித்தனமான இந்த விளையாட்டுகளை குழந்தைகள் என்ஜாய் செய்யட்டும்' என அவர் பதிவிட்டுள்ளார்.