டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

வினோத் இயக்கத்தில் அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா நடித்துள்ள வலிமை படம் நாளை(பிப்., 24) வெளியாகிறது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளிலும் வெளியாகிறது. உலகம் முழுக்க 4000 தியேட்டர்களில் இந்த படம் வெளியாகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பின் அஜித்தின் படம் வெளியாவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். அதனால் படத்திற்கான புக்கிங் நாளை மட்டுமின்றி ஞாயிறு வரை செம புக்கிங் ஆகி உள்ளது. கொரோனா பிரச்னையால் சில மாதங்களாக தவித்து வந்த சினிமா துறையினர் மற்றும் தியேட்டர்கள் உரிமையாளர்களுக்கு ஒரு நம்பிக்கையை விதைத்துள்ளது வலிமை என்று கூட சொல்லலாம்.
இப்படி படத்திற்கு கிடைத்துள்ள முன் வரவேற்பு குறித்து நடிகர் அஜித்திடம் பேசியிருக்கிறார் இயக்குனர் வினோத். அதற்கு அஜித் என்ன சொல்லி உள்ளார் தெரியுமா... ''இதுவும் கடந்து போகும்'' என்றவர், நம்மை சுற்றி நல்லது நடந்தாலும் சரி, கெட்டது நடந்தாலும் சரி எதுவும் நிரந்தரமில்லை என நீங்கள் நினைத்து கொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வாழ்க்கையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தால் ஈஸியாக கடந்து போகும். வெற்றி, தோல்வி எப்போதும் வாழ்வில் ஒன்றாக தான் இருக்கணும்'' என்றாராம். அஜித்தின் இந்த பேச்சை கேட்டு மிகவும் ஆச்சர்யப்பட்டு போய் உள்ளார் வினோத்.




