Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மார்ச் மாதம் மீண்டும் களமிறங்கும் 'ஆர்ஆர்ஆர்' குழுவினர்

22 பிப், 2022 - 16:02 IST
எழுத்தின் அளவு:
RRR-Team-again-arriving-in-March

ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்துள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் இந்த ஆண்டின் மிகப் பிரம்மாண்டமான படமாக வெளியாக உள்ளது. ஜனவரி மாதமே வெளியாக வேண்டிய படத்தை கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைத்தனர். அதன்பின் படம் மார்ச் 25ம் தேதியன்று வெளியாகும் என அறிவித்தார்கள்.

முன்னர் அறிவிக்கப்பட்ட வெளியீட்டுத் தேதியான ஜனவரி 7ம் தேதிக்கு முன்பாக படக்குழுவினர் மும்பை, சென்னை, கொச்சி, பெங்களூரூ ஆகிய இடங்களில் படத்திற்காக பத்திரிகையாளர் சந்திப்பு, வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்வுகள் ஆகியவற்றை நடத்தினர்.

ஐதராபாத்தில் பத்திரிகையாளர் சந்திப்பை மட்டும் நடத்தினர். வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்வை நடத்துவதற்குள் கொரோனா ஒமிக்ரான் தாக்கம் வந்ததால் படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைத்தனர். அப்போது நடைபெறாத விழாவை மார்ச் மாதம் நடத்த முடிவெடுத்துள்ளார்களாம். மேலும், படத்தின் பிரமோஷனுக்காக மீண்டும் மார்ச் மாதம் முதல் வாரத்திலிருந்தே பேட்டிகள், டிவி நிகழ்ச்சிகள் ஆகியவற்றை நடத்த உள்ளார்களாம்.

ஜனவரி 7ம் தேதி இந்தப் படத்தின் வருகைக்காக இந்தியத் திரையுலகமே காத்திருந்தது. இப்போது மார்ச் 25ம் தேதிக்காகக் காத்திருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
காதல் கிசு கிசு : கமெண்ட் செய்த விஜய் தேவரகொண்டாகாதல் கிசு கிசு : கமெண்ட் செய்த விஜய் ... இயக்குனர் மணிகண்டனை கட்டித்தழுவி முத்தமிட்டு வாழ்த்திய மிஷ்கின் இயக்குனர் மணிகண்டனை கட்டித்தழுவி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in