ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
வினோத் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேய மற்றும் பலர் நடிக்கும் 'வலிமை' படம் நாளை மறுநாள் பிப்ரவரி 24ம் தேதி வெளியாகிறது.
இப்படத்திற்கான அதிகாலை சிறப்புக் காட்சிக்கான முன்பதிவும், முதல் நாளுக்கான முன்பதிவும் நேற்றே முடிந்துவிட்டது. அதே சமயம் அதற்கடுத்த நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களுக்கான முன்பதிவு சிறப்பாக இல்லாமல் இருந்தது. இது தியேட்டர்காரர்களை சற்றே கவலைக்குள்ளாக்கியது. 'வலிமை' படம்தான் தியேட்டர்களுக்கு மக்களை மீண்டும் கொண்டு வரும் என்ற நம்பிக்கையில் அவர்கள் இருந்தார்கள்.
பெரும்பாலான மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் முன்பதிவு நேற்றிரவுதான் ஆரம்பமானது. இன்றைய நிலவரப்படி மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள், சிங்கிள் ஸ்கிரீன் ஆகியவற்றையும் சேர்த்து சரியாக முன்பதிவாகாமல் இருந்த வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களிலும் 90 சதவீதத்திற்கும் மேல் முன்பதிவு முடிந்துள்ளது.
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் தவிப்பால் அடிக்கடி தியேட்டர்களை மூடுவதும், 50 சதவீத இருக்கை அனுமதி என்பதுமாக தியேட்டர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வந்தன. கடந்த இரண்டு வருடங்களில் 'மாஸ்டர், கர்ணன், சுல்தான், டாக்டர், மாநாடு,' உள்ளிட்ட சில படங்கள் மட்டுமே அனைவருக்கும் லாபத்தைக் கொடுத்த படங்களாக இருந்தன.
இந்த வருடம் ஆரம்பித்து இரண்டு மாதங்கள் நிறைவடைய உள்ளது. ஆனாலும், ஒரு படம் உருப்படியாக வசூலிக்கவில்லை என்ற சோகத்தில் இருந்தார்கள் தியேட்டர்காரர்கள். ஆனால், 'வலிமை' படத்திற்கான தற்போதைய முன்பதிவு நிலவரம் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.