பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்துள்ள 'பீஸ்ட்' படத்தின் முதல் சிங்கிளான 'அரபிக்குத்து' சில தினங்களுக்கு முன்பு யு டியூபில் வெளியானது. இளம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் பாடலுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இப்பாடலை மிக அதிகமாக பிரமோஷன் செய்து வருகிறார்கள். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை சமந்தாவும் இந்தப் பாடலுக்கு நடனமாடி ஒரு ரீல் வீடியோவை நேற்று வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ ஒரு விமான நிலையத்தில் எடுக்கப்பட்டுள்ளது. 'மீண்டும் ஒரு நள்ளிரவு நேர விமானப்பயணமா…இல்லை,” எனப் பதிவிட்டு அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
சமந்தாவின் ரீல் வீடியோவிற்கு அனிருத் உள்ளிட்ட சில சினிமா பிரபலங்கள் கமெண்ட் போட்டு பாராட்டியுள்ளனர். இந்த வீடியோவிற்கு 24 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.