இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
யு டியுப், மற்றும் சமூக வலைத்தளங்களில் தெலுங்கு சினிமாவுக்கும், தமிழ் சினிமாவுக்கும் இடையே தான் அதிகமான போட்டி நிலவி வருகிறது. இன்று காதலர் தினத்தை முன்னிட்டு விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' படத்தின் முதல் சிங்கிளும், தெலுங்கில் மகேஷ் பாபு நடித்துள்ள 'சர்க்காரு வாரி பாட்டா' படத்தின் முதல் சிங்கிளான 'கலாவதி' பாடலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், 'கலாவதி' பாடலை ஒரு நாள் முன்னதாக நேற்றே வெளியிட்டுவிட்டார்கள். நேற்று மாலை வெளியான இப்பாடல் அதற்குள் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. தென்னிந்தியப் படங்களில் மிக விரைவாக 12 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இதற்கு முந்தைய சாதனையான 'புஷ்பா' படத்தின் 'ஓ அன்ட்டாவா…' பாடல் தான் மிக விரைவாக 12 மில்லியன் சாதனையைப் படைத்திருந்தது.
விஜய்யின் 'பீஸ்ட்' படத்தின் முதல் சிங்கிளான 'அரபிக் குத்து' இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. மகேஷ் பாபுவின் 'கலாவதி' பாடல் படைத்த சாதனையை அடுத்த ஒரு நாளைக்குள் விஜய்யின் 'அரபிக்குத்து' முறியடிக்குமா என்பதை நாளைக்குள் தெரிந்துவிடும்.
விஜய், அனிருத், சிவகார்த்திகேயன், நெல்சன் ஆகியோரின் கூட்டணி என்பதால் புதிய சாதனை படைக்கவும் வாய்ப்புள்ளது.