மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தலைவர் என். இராமசாமியும் மற்ற நிர்வாகிகளும் இணைந்து தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், "தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் திரைத்துறை சம்பந்தமான பல்வேறு கோரிக்கைகள் தமிழக முதல்வரிடம் வைத்தோம். அவற்றை பரிசீலித்த முதல்வர் அவர்கள் திரையரங்குகளில் 50 சதவிகித மக்களை படம் பார்க்க அனுமதித்த முதல்வர் இன்று நூறு சதவிகிதம் திரையரங்குகளில் மக்கள் படம் பார்க்க அனுமதி வழங்கி ஆணை பிறப்பித்துள்ளார்.
தொழில்துறை சிறந்து விளங்க பல்வேறு சலுகைகளை வழங்கிவரும் முதல்வர் அவர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் வைத்துள்ள கோரிக்கைகளை ஒவ்வொன்றாக திரை உலகினருக்கு நிறைவேற்றி வருகிறார். அதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பிலும், தமிழ் திரை உலகம் சார்பிலும், கோடானுகோடி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்."
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.